பேரரசி மிளகுக் குடுவை
பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள ஒக்சுனேயில் கிடைத்த பேரரசி மிளகுக் குடுவை | |
செய்பொருள் | வெள்ளி |
---|---|
அளவு | உயரம்:103 mm (4.1 அங்) விட்டம்:33 mm (1.3 அங்) எடை:107.9 கி |
உருவாக்கம் | கிபி 4ம் நூற்றாண்டு. |
காலம்/பண்பாடு | உரோமன் |
இடம் | ஒக்சுனே, சபோக் |
தற்போதைய இடம் | அறை 49, பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன் |
பதிவு | 1994,4-8 33 |
பேரரசி மிளகுக் குடுவை என்று பொதுவாக அறியப்படும் ஒக்சுனே மிளகுக் குடுவை[1] ஒரு வெள்ளியாலான மிளகுக் குடுவை ஆகும். பகுதியாகப் பொன்முலாம் பூசப்பட்ட இது ஏறத்தாழ கிபி 400 ஆண்டைச் சேர்ந்தது. ஓக்சுனே புதையலின் ஒரு பகுதியாக நவம்பர் 1992ல் கண்டெடுக்கப்பட்ட இது தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது. இக்குடுவை ஒரு பெண்ணின் உடலின் மேலரைப் பகுதியைக் காட்டும் உள்ளீடற்ற சிலை வடிவிலானது. அடிப்பகுதியைத் திறந்து அதற்குள் மிளகுத்தூள் அல்லது வேறு தூள்களை உள்ளிடுவதற்கு ஏற்ற வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதன் அடிபகுதியில் மூன்று நிலைகளைக் கொண்ட ஒரு சுழலும் வட்டு பொருத்தப்பட்டுள்ளது. ஒரு நிலை தூள்களை உள்ளிடுவதற்கு வழியேற்படுத்துகிறது. அடுத்த நிலையில் தூளை வெளியே எடுப்பதற்கான சிறு துளைகளோடு அமைந்தது. மூன்றாவது நிலை குடுவையை முற்றாக மூடுவதற்கானது.[1] 2010ல் பிபிசி வானொலி 4 இன் "100 பொருட்களில் உலக வரலாறு" என்னும் தொடரில் 40 ஆவது பொருளாக இடம்பெற்றது.[2]
பெயர்
[தொகு]கிழக்கு உரோமப் பேரரசின் பிற்காலத்தில் பயன்பட்ட எஃகுவேலைத்தலத் தராசில் பயன்படுத்தப்பட்ட எடைக் கற்கள் ஒக்னேயில் கண்டெடுக்கப்பட்ட இந்த மிளகுக் குடுவையின் வடிவத்தை ஒத்திருந்தன.[3] இம்மிளகுக்குடுவை கண்டெடுக்கப்பட்ட காலத்தில் மேற்குறிப்பிட்ட எடைக்கற்கள் ஒரு பேரரசியின் உருவத்தைக் கொண்டது எனக் கருதப்பட்டது. இதனால், அதைப் போல் இருந்த மிளகுக் குடுவையையும் பேரரசி மிளகுக்குடுவை என அழைத்தனர். பிற்காலத்தில் குறித்த வெண்கல எடைக்கற்கள் ஒரு பேரரசியையோ அல்லது ஒரு உரோமக் கடவுளையோ குறிக்கவில்லை என்ற கருத்து வலுப்பெற்றது. உருவத்தின் கையில் இருக்கும் சுருள் கல்வியையும், செல்வத்தையும் குறிக்கிறது என்றும், உருவத்தின் முடி பேரரசிக்கு உரியதாகக் காணப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.[4] மிளகுக் குடுவையை ஆராய்ந்தவர்கள் "பேரரசி" என்பதற்குப் பதிலாக "பெண்" என்னும் பெயரே பொருத்தமானது என்கின்றனர். இருந்தாலும், மிளகுக்குடுவை ஏற்கெனவே "பேரரசி"யின் பெயரில் பரவலாக அறியப்பட்டுவிட்டதால் அப்பெயரே தொடர்கிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Hoxne hoard pepper pot பரணிடப்பட்டது 2015-10-18 at the வந்தவழி இயந்திரம், British Museum, accessed June 2010
- ↑ Hoxne pepper pot, BBC, accessed June 2010
- ↑ "Steelyard Weight with a Bust of a Byzantine Princess, 400–450". Metropolitan Museum of Art. பார்க்கப்பட்ட நாள் 1 July 2010.
- ↑ McClanan, Anne L. (2002), Representations of Early Byzantine Empresses: Image and Empire, Palgrave Macmillan, p. 60
- ↑ Johns, Catherine (2010), The Hoxne Late Roman Treasure - Gold Jewellery and Silver Plate, British Museum, p. 7, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7141-1817-6